×

லாரி மீது பைக் மோதி தாசில்தார் பலி

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ்(55). தஞ்சாவூர் பத்திரப்பதிவு துறை தாசில்தார். இவர், நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் பைக்கில் சொந்த வேலையாக நம்பிவயல் சென்று விட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். பட்டுக்கோட்டை- சூரப்பள்ளம் பைபாஸ் பகுதியில் வந்தபோது, முன்னால் சென்ற டாரஸ் லாரி திடீரென பிரேக் போட்டு நின்றதால் அதன்மீது பைக் மோதி ரமேஷ் பலியானார். இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ரமேஷுக்கு வசந்த குமாரி(50) என்ற மனைவியும், ஒரு மகன், மகனும் உள்ளனர். …

The post லாரி மீது பைக் மோதி தாசில்தார் பலி appeared first on Dinakaran.

Tags : Dasildar ,Pattukkota ,Ramesh ,Bonnavarayangota ,New Housing Board Apartments ,Thanjam District Pattukkota ,Thanjavur ,Lorry ,
× RELATED மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த...