×

சிறுவர்களுக்காக சூப்பர் ஹீரோ கெட்டப்பில் வந்த ஆதி

ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவன், தற்போது இயக்கியுள்ள ‘வீரன்’ படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஆதிரா ராஜ், காளி வெங்கட், முனீஷ்காந்த் நடித்துள்ளனர். பிரபல கார்ப்பரேட் கம்பெனியின் சதியில் இருந்து கிராமத்தைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதையான இதில், ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது கையிலிருந்து மின்னல் சக்தியை வெளிப்படுத்தும் சூப்பர் பவர் கொண்ட கேரக்டரில் நடித்திருந்தார். திரைக்கு வந்துள்ள இப்படம் ‘யு’ சான்றிதழ் பெற்ற படம் என்பதால், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த படமாக மாறியுள்ளதாகச் சொல்லி, சிறுவர்களுக்காக சிறப்புக்காட்சி ஒன்றை சத்யஜோதி பிலிம்ஸ் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் ஏ.ஆர்.கே.சரவன், ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் படக்குழுவினர், சிறுவர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். அப்போது அவர்களை மகிழ்விக்கும் விதமாக, சூப்பர் ஹீரோ வேடத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி சிறுவர்கள் முன்பு தோன்றி, அவர்களுடன் கலந்துரையாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ‘இப்படம் குழந்தைகளைக் கவரும் அம்சங்களுடன் உருவாக்கப்பட்டது. இப்போது அவர்கள் கைத்தட்டி ஆரவாரத்துடன் பார்த்து ரசிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்றார், ஹிப்ஹாப் தமிழா ஆதி.

The post சிறுவர்களுக்காக சூப்பர் ஹீரோ கெட்டப்பில் வந்த ஆதி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Adi ,Adhi ,Nikki Kalrani ,R.R. K.K. Saravan ,Athira Raj ,Kali Venkat ,Munishkant ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் ரூ.2.80 கோடியில் புதிய வகுப்பறை கட்டிடம்