×

நத்தத்தில் காளியம்மன் கோயில் திருவிழா

நத்தம், மே 17: நத்தம் கர்ணம் தெருவிலுள்ள செல்வ விநாயகர், மதுர காளியம்மன், பாலமுருகன் கோயில் திருவிழா கடந்த மே 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. இதையடுத்து கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மே 13ம் தேதி அம்மன் குளத்திலிருந்து சக்தி கரகம் மேளதாளம் முழங்க அதிர்வேட்டுகளுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தது. மே 14ம் தேதி பால்குட ஊர்வலம், அரண்மனை பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. இரவு சக்தி கரகம் ஊர்வலமாக அம்மன் குளம் சென்றடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதுபோல் நத்தம் தெலுங்கர் தெருவில் உள்ள சாத்தாவு ராயன், காளியம்மன் கோயில் திருவிழா கடந்த மே 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மே 12ம் தேதி மாவிளக்கு, அரண்மனை பொங்கல் வைத்தல் நடந்தது. மே 13ம் தேதி அக்னிசட்டி எடுத்தல், பால்குட ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் முளைப்பாரி ஊர்வலம், சுவாமிகள் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post நத்தத்தில் காளியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.

Tags : Kaliamman Temple Festival ,Natham ,Selva Vinayagar ,Madura Kaliamman ,Balamurugan Temple Festival ,Natham Karnam Street ,Ganapathy Homam ,Kannimar Theertham ,Kaliamman Temple Festival in Natham ,
× RELATED பெரியதாழையில் ரூ.62 லட்சத்தில்...