×

10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: ஜி.கே.வாசன் அறிக்கை

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 2024-25 ம் கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணாக்கர்கள் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியது. அதேபோல், 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.09% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. அரசுப்பள்ளிகள் 87.34 %, அரசு உதவி பெறும் பள்ளிகள் 93.09 %, தனியார் பள்ளிகள் 98.03% தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவ மாணவிகள் மனம் தளராமல் அடுத்து வரும் தேர்வில் பங்கேற்று நன்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். நடந்து முடிந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறேன்.

The post 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துகள்: ஜி.கே.வாசன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : G.K. Vasan ,Chennai ,Tamil Nadu Congress Party ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…