வத்திராயிருப்பு, மே 16: கோடை வெயிலை முன்னிட்டு வத்திராயிருப்பில் நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது இதனால் முதியவர்கள் முதல் குழந்தைகள், பெரியவர்கள் வரை மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தாக்கூடிய குளிர்பானங்களை அருந்துகின்றனர்.
இந்த நிலையில் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிக அளவில் உள்ளன. இப்பகுதியில் உள்ள நுங்கு பதநீர் மிகவும் சுவையுடையதாக இருக்கும். மேலப்பட்டி, இலந்தைகுளம், சுரைக்காய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பதநீர் மற்றும் நுங்கு வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பதநீர் 100 ரூபாய்க்கும் ஒரு நுங்கு 7 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. நுங்கு மற்றும் பதனீரை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
The post வத்திராயிருப்பில் நுங்கு, பதநீர் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.
