- பால் குட உற்சவம்
- திருநெல்வேலி செல்லியம்மன் கோயில்
- வைகாசி மாதம்
- வனபேச்சியம்மன்
- ராக்காச்சியம்மன்
- கொண்டான அய்யனார்
- சாமத்துவாபுரம்
- கடலாடி
சாயல்குடி,மே 16: கடலாடி சமத்துவபுரம் அருகே உள்ள வனப்பேச்சியம்மன், ராக்காச்சியம்மன், கொண்டன அய்யனார் கோயில் வைகாசி மாத 15வது வருடாந்திர உற்சவ விழா கடந்த 7ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. நாள்தோறும் மூலவர்களுக்கு பால், தேன், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர், திரவியம், மஞ்சள் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.இந்நிலையில் நேற்று காலையில் கடலாடி மங்கள விநாயகர் கோயில் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி, வேல் எடுத்து கடலாடியின் முக்கிய வீதி, சமத்துவபுரம் வழியாக ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அலங்காரத்துடன் கூடிய தீபாராதனை நடந்தது. பக்தர்கள் மாவிளக்கு, ஆயிரம் கண்பானை எடுத்தல், பொங்கல் வைத்தல், முடிகாணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post பேச்சியம்மன் கோயிலில் பால்குட உற்சவம் appeared first on Dinakaran.