- அய்யனாரப்பன் கோயில் திருவிழா
- இடிபதி
- புடுபாளையம்
- அய்யனாரப்பன் கோயில்
- சுவாமி
- சாமி திருவிதி
- அய்யனாரப்பன் கோயில் திருவிழா
இடைப்பாடி, மே 16: இடைப்பாடி அருகே புதுப்பாளையம் அய்யனாரப்பன் கோயில் திருவிழாவையொட்டி, சித்திரை 3ம் தேதி பூச்சாட்டுடன் விழா தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூஜைகள் நடந்தது. இரவில் சாமி திருவீதி உலா நடந்தது. முக்கிய நிகழ்வான நேற்று காலை, குதிரை வாகனத்தில் தங்க கிரீடம் அணிவித்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து அய்யனாரப்பன் சுவாமியை சப்பரத்தில் அமர்த்தி பக்தர்கள் வேம்பனேரி, புதுப்பாளையம், கருப்பன் தெரு, சின்ன முத்தையம்பட்டி, பெரிய முத்தையம்பட்டி, சடச்சிபாளையம், மணிக்காரன்வளவு, சின்ன புதுப்பாளையம் ஆகிய பகுதிகள் வழியாக தூக்கிச் சென்றனர்.
அப்போது, அப்பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். மேலும் விரதம் இருந்த பக்தர்கள் வீட்டிற்கு ஒரு பாவை விளக்கு என 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்து பாவை விளக்கை தலையில் தூக்கியவாறு 7 ஊர்களை கடந்து பின்னர் கோயிலை அடைந்தனர். நேற்று இரண்டாவது நாளாக சாமியை சப்பரத்தில் அமர்த்தி பக்தர்கள் தூக்கி சென்று நேற்று மாலை கோயிலை அடைந்தனர். அதை தொடர்ந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். இன்று(16ம் தேதி) கிடா வெட்டி, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி, கொங்கணாபுரம், இடைப்பாடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post அய்யனாரப்பன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.