×

வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஆபீசில் ரெய்டு நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் பறிமுதல்

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் முறையான அனுமதியின்றி சட்ட விரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் அதிகளவில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து சென்னை குடியேற்றத்துறை பாதுகாப்புத்துறையினர், மதுரை மாவட்ட போலீசாருடன் இணைந்து நேற்று மேலூர் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மேலூர் தாலுகாவில் பல்வேறு இடங்களில் இயங்கிய ஆட்சேர்ப்பு மையங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையில் நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், சம்பந்தப்பட்ட மையங்களின் நிர்வாகிகளை பிடித்து அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அடிப்படையில் சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை இருக்கும் எனத் தெரிகிறது.

The post வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஆபீசில் ரெய்டு நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ministry of External Affairs ,Melur ,Madurai district ,Chennai Immigration Department Security Department ,Dinakaran ,
× RELATED ஜூலை 24ஆம் தேதி வரை இந்தியா, பாக். வான்வெளிகள் மூடல்