×

ஐஆர்இஎல் சார்பில் வாணியகுடியில் ரூ.9.28 லட்சம் செலவில் காங்கிரீட் சாலை

குளச்சல், மே 16: மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐ.ஆர்.இ.எல் நிறுவனம் சார்பில் வாணியகுடி மீனவ கிராமத்தில் ரூ.9.28 லட்சம் செலவில் காங்கிரீட் சாலை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. வாணியகுடி பங்கு தந்தை சகாய ஆனந்த், ஐ.ஆர்.இ.எல் முதன்மை பொதுமேலாளர் செல்வராஜன் முன்னிலையில் சாலையை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வாணியகுடி ஊர் தலைவர் அமலன், செயலர் சிம்சன், பொருளாளர் சீலன், துணை செயலாளர் நெல்சன், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் எனல்ராஜ் , மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பங்கு பேரவை உறுப்பினர்கள், ஐ.ஆர்.இ.எல் நிறுவன பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஐஆர்இஎல் சார்பில் வாணியகுடியில் ரூ.9.28 லட்சம் செலவில் காங்கிரீட் சாலை appeared first on Dinakaran.

Tags : Vaniyagudi ,IREL ,Kulachal ,Manavalakurichi ,Sahay Anand ,Principal General Manager ,Selvarajan… ,Dinakaran ,
× RELATED கெடார் அருகே நள்ளிரவில் நகை கடை ஷட்டரை...