×

தெற்கு ரயில்வே தலைமையக கட்டிட நூற்றாண்டு விழா: சிறப்பு தபால் அட்டை வெளியீடு

சென்னை: தெற்கு ரயில்வே சென்னை, திருச்சி, மதுரை, திருவனந்தபுரம், சேலம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 கோட்டங்களை உள்ளடக்கியது. இதன் தலைமையக கட்டிடம் சென்னையில் அமைந்துள்ளது. 1922 டிசம்பர் 11ம் தேதி இது திறக்கப்பட்டது. கட்டிடத்தின் நூற்றாண்டு விழா சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கொண்டாடப்பட்டது.இதையொட்டி சிறப்பு தபால் அட்டை வெளியிடப்பட்டது. இதை தமிழ்நாடு வட்ட தபால்துறை தலைவர் செல்வகுமார் வெளியிட, தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் பொறுப்பு பி.ஜி.மல்யா பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தலைமை பணியாளர்கள் அதிகாரி நாராயணன், மூத்த பணியாளர்கள் அதிகாரி பழனி மற்றும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்….

The post தெற்கு ரயில்வே தலைமையக கட்டிட நூற்றாண்டு விழா: சிறப்பு தபால் அட்டை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Southern Railway Headquarters Building Century Festival ,Chennai ,Southern Railways ,Trichy ,Madurai ,Thiruvananthapuram ,Salem ,Palakkad ,Southern Railway Headquarters Building Centenary Festival ,
× RELATED கோடை விடுமுறையை ஒட்டி தெற்கு ரயில்வே சார்பில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கம்