×

ஆழியாறு அணையிலிருந்து 152 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவு

கோவை: ஆழியாறு அணையிலிருந்து 152 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில், ஆழியாறு பழைய ஆயக்கட்டுப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட நிலங்களுக்கு, முதல்போக பாசனத்திற்காகநாளை முதல் அக்.15 வரை ஆழியாறு அணையிலிருந்து தொடர்ந்து 152 நாட்களுக்கு, 1205 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டத்திலுள்ள 6400 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post ஆழியாறு அணையிலிருந்து 152 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Aliyar dam ,Coimbatore ,Aliyar ,Anamalai taluk, Coimbatore district ,Ayakattu ,
× RELATED கேரளாவுக்கு தமிழக தனியார் ஆம்னி பேருந்துகள் இன்று முதல் செல்லாது