×

செஞ்சி தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்ததற்கான ஆதாரம் இல்லை : தேர்வுத்துறை

விழுப்புரம்: செஞ்சி தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்ததற்கான ஆதாரம் இல்லை என்று தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அதிக மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதால் காப்பி அடித்திருக்கலாம் என சர்ச்சை எழுந்தது. சர்ச்சையை அடுத்து தேர்வு மையத்தில் தேர்வுத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர். மாணவர்கள் மிகவும் திறம்பட விடைத்தாளை எழுதி உள்ளதாக தேர்வுத் துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post செஞ்சி தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்ததற்கான ஆதாரம் இல்லை : தேர்வுத்துறை appeared first on Dinakaran.

Tags : Chenxi Exam Center ,Electoral Department ,Viluppuram ,Election Department ,Senji Examination Center ,Sengxi ,Senji Exam Center ,Selection Department ,Dinakaran ,
× RELATED நெற்பயிரில் ஊடுபயிராக பயிரிடப்படும்...