×

ராணுவ அதிகாரி சோபியா குரேஷியை மதரீதியாக விமர்சித்த விவகாரம்: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: ராணுவ அதிகாரி சோபியா குரேஷியை மதரீதியாக விமர்சித்ததற்காக பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனக்கு எதிரான வழக்கை எதிர்த்து முறையிட்ட நிலையில் மத்திய பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் சர்ச்சைக்குரிய கருத்தை முழுமையாக குறிப்பிடவில்லை. மத்திய பிரதேசத்தில் பாஜக அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரத்தில் திருப்தியில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

The post ராணுவ அதிகாரி சோபியா குரேஷியை மதரீதியாக விமர்சித்த விவகாரம்: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Sofia Qureshi ,Supreme Court ,BJP ,Delhi ,Madhya Pradesh ,Minister ,Gunwar Vijay Shah ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...