×

ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் : டிராய் உத்தரவு

டெல்லி : ப்ரீ-பெய்டு திட்டங்கள் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் – Telecom Regulatory Authority of India) உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்று இருந்த நிலையில் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்து உள்ளன.  இதனால் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து ப்ரீபெய்ட் வேலிடிட்டி காலத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென பயனாளிகள் கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இது குறித்த உத்தரவை டிராய் வெளியிட்டுள்ளது.பிரிபெய்டு காலத் திட்டத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, திட்ட வவுச்சர்,சிறப்பு டாரிப் வவுச்சர், காம்போ வவுச்சர் ஆகியவற்றில் தலா ஒரு திட்டத்தின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்கள் நிர்ணயிக்க உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ப்ரீபெய்டு ரீசார்ஜ்களின் எண்ணிக்கை 12ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. …

The post ப்ரீபெய்டு திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தை 30 நாட்களாக நிர்ணயிக்க வேண்டும் : டிராய் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : TRAI ,Delhi ,Indian Telecom ,Dinakaran ,
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...