கும்பகோணம் மே 14: திமுக ஆட்சியில் நிறைவேற்றிய நான்கு ஆண்டுகால சாதனைகளை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க புத்தகங்களை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வீடு, வீடாக சென்று வழங்கும் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். கும்பகோணம் ஐயப்பன் நகரில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு காலம் ஆன நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றிய திட்டங்களை பொதுமக்கள் அறியும் வகையில் இன்றைய தினம் சாதனை விளக்க புத்தகங்களை மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் தலைமையிலும், எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கும்பகோணத்தில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று நான்காண்டு சாதனைகளை எடுத்து சொல்லி புத்தகங்களை வழங்கி இந்த சாதனைகள் தொடர வேண்டுமென பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் தலை மை செயற்குழு உறுப்பினர் குட்டி தட்சிணாமூர்த்தி மாநகர அவைத்தலைவர் வாசுதேவன், துணை செயலாளர்கள் ப்ரியம் சசிதரன், சிவானந்தம், செந்தாமரை, பொருளாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் உள்ளூர் கணேசன், சுதாகர், மண்டல குழு தலைவர்கள் பாபு.நரசிம்மன், மனோகரன், அசோக்குமார், பகுதி செயலாளர்கள் செல்வராஜ், கல்யாணசுந்தரம், மாவட்ட சார்பணி அமைப்பாளர்கள் முருகன், அனந்தராமன், சிவக்குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post திமுகவின் 4 ஆண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கி கையடக்க புத்தகங்கள் appeared first on Dinakaran.

