×

ரூ.1.71 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் வழங்கல்

ராஜபாளையம், மே 14: ராஜபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,06,000 வீதம் மொத்தம் ரூ.1.71 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகள் நலனில் பெரிதும் அக்கறை கொண்டு, அவர்கள் முன்னேற்றத்திற்கு தனியாக துறையை உருவாக்கி, பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், 161 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.71 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட மோட்டார் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கான மனுக்கள் அதிக அளவில் வரப்பெற்றதால் மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருதி மனு அளித்த 3 மாதம் முதல் 4 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், இருக்கும் அளவிற்கு அரசு ஒதுக்கீடு செய்யும் வாகனங்களோடு, கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியின் கீழும், அமைச்சர்கள் முயற்சியினால், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியிலிருந்தும், தமிழ்நாட்டிலேயே நமது விருதுநகர் மாவட்டம் தான் அதிகமான இருசக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கியுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.1.71 கோடி மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Welfare Department ,Collector ,Jayaseelan ,Dinakaran ,
× RELATED கொலைக் குற்றவாளி குண்டாசில் கைது