- சிவகங்கை
- ஜனாதிபதி
- தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சிவில் இன்ஜினியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு
- ராகவன்
- பாண்டி
- அப்தஹீர்
- தின மலர்
சிவகங்கை, மே 14: கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர் ராகவன், மண்டலத் தலைவர் பாண்டி, செயலர் அப்தாஹீர், முன்னாள் மண்டலத் தலைவர் பாரதிதாசன், சேகர், அண்ணாமலை மற்றும் பொறியாளர்கள் சிவகங்கை கலெக்டர் ஆஷாஅஜித்திட்டம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கல்குவாரி உரிமையாளர்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் ஜல்லி கற்கள் ஆகியவற்றின் விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் யூனிட் ஒன்றுக்கான விலை ரூ.3,000 வரை உயர்ந்துள்ளது. இது 100சதவீத விலை உயர்வாகும்.
இந்த விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், கட்டிட பொருட்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு கட்டுமானத் திட்டங்கள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் துறை வீழ்ச்சியடைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, கிரஷர் உரிமையாளர்கள் மேற்கொண்ட அநியாய விலை உயர்வை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கல்குவாரிகளை அரசுடைமையாக மாற்ற வேண்டும். இதனால் அரசு வருமானம் பெற முடியும். மேலும் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும். ஆற்று மணல் குவாரிகளையும் உடனடியாக திறக்க வேண்டும். சிமெண்ட், கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். கட்டுமான பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும். கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டிட அனுமதி கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தொடர்ந்து விலை உயரும் கட்டுமானப் பொருட்கள் கட்டுப்படுத்த கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.