நிலக்கோட்டை,மே 14: நிலக்கோட்டை அருகே செங்கோட்டையைச் சேர்ந்த அழகர் மனைவி விஜயா (45). இவரும் கருப்பையா மனைவி பேச்சியம்மாளும் (55) சகோதரிகள். இவர்களுக்குள் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பேச்சியம்மாள் மற்றும் அவரது மகன்கள் கண்ணதாசன் (40), மணிகண்டன் (30), ரமேஷ் பாபு (33) மற்றும் அவரது உறவினர்கள் விக்னேஷ் (22), கருப்பையா (59) ஆகிய 6 பேரும் விஜயா வீட்டிற்குள் நுழைந்து அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் விஜயா மற்றும் அவரது உறவினர்கள் தனம், செல்வகுமார், நளினி ஆகிய 4 பேரையும் கடுமையாக அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் விஜயாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டத. இதனைத் தொடர்ந்து உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரில் லக்கோட்டை போலீசார் தகராறு செய்த 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, கண்ணதாசன், மணிகண்டன், ரமேஷ்பாபு,விக்னேஷ், கருப்பையா ஆகிய 5 பேரை கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்டர் முன்னிலையில் ஆஜர் படித்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
The post நிலக்கோட்டை அருகே சொத்து பிரிப்பதில் தகராறு: 5 பேர் கைது appeared first on Dinakaran.