நிலக்கோட்டை, மே 14: ஆத்தூர் பகுதியில் செம்பட்டி போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூர் தாலுகா அலுவலகம் செல்லும் வழியில் சாலையோரம் நின்ற காரில் இருந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். போலீசார் அந்த காரில் சோதனை செய்ததில், 3 மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 350 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
The post 350 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.