- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா
- தென் ஆப்பிரிக்கா
- லண்டன்
- ஆஸ்திரேலியா
- ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி
- ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்
- லார்ட்ஸ் மைதானம்
- லண்டன்…
- தின மலர்
லண்டன்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் 3வது தொடருக்கான இறுதிப் போட்டி வரும் ஜூன் 11ம் தேதி, லண்டனின் லார்ட்ஸ் அரங்கில் தொடங்குகிறது. இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா தொடர்ந்து 2வது முறையாக களம் காண உள்ளது. தென் ஆப்ரிக்கா முதல் முறையாக பைனலில் விளையாட உள்ளது. இந்நிலையில் இறுதி ஆட்டத்தில் விளையாட உள்ள ஆஸ்திரேலியா அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸி அணியில் கேமரூன் கிரீன் மீண்டும் இடம் பெற்றுள்ளார். ஐபிஎல் தொடர்களில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வீரர்களில் பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் (ஐதராபாத்), மிட்செல் ஸ்டார்க்(டெல்லி) ஜோஷ் ஹசல்வுட் (பெங்களூர்), ஜோஷ் இங்லீஸ் (பஞ்சாப்) ஆகியோர் மட்டும் ஆஸி அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆஸ்திரேலியா அணி தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி, ‘வீரர்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு எந்த தடையும் இல்லை.
அதனால் அவர்கள் மீண்டும் இந்தியா சென்று விளையாடி இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக பயிற்சி முகாமுக்கு திரும்பி விடுவார்கள்’ என்று கூறியுள்ளார். அதேபோல், ஐபிஎல் போட்டிகளில் ஆடிவரும் அய்டன் மார்க்ரம் (லக்னோ), லுங்கி நிகிடி (பெங்களூர்), மார்கோ யான்சன் (பஞ்சாப்), வியான் முல்டர் (ஐதராபாத்), காகிசோ ரபாடா (குஜராத்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (டெல்லி), ரியான் ரிக்கெல்டன், கார்பின் போஷ் (மும்பை) ஆகிய தென் ஆப்ரிக்க வீரர்கள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம்பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியில் இடம்பெற்றுள்ளனர்.
* அணிகள் விவரம் ஆஸ்திரேலியா
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹசல்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லீஸ், உஸ்மான் கவாஜா, சாம் கோஸ்டாஸ், மேத்யூ குஹ்னேமன், மானஸ் லபுஷேன், நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டார்.
* தென் ஆப்ரிக்கா
டெம்போ பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்காம், கார்பின் போஷ், டோனி டி சோர்சி, மார்கோ யான்சன், கேசவ் மகராஜ், அய்டன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரான் முத்துசாமி, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், காகிசோ ராபாடா, ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கேல் வெர்ரெய்ன்.
The post ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸி, தென் ஆப்ரிக்கா அணிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.