- திமுக
- கூரத்தங்குடி, ஆதமங்கலம்
- கில்வேலூர்
- நாகப்பட்டினம் மாவட்டம்
- தென் யூனியன் திமுக
- திமுக அரசு
- தின மலர்
கீழ்வேளூர், மே 13: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கூரத்தாங்குடி, ஆதமங்கலம் ஆகிய இடங்களில் நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில் தி.மு.க. அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க தெரு முனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது. தெரு முனை பிரச்சார கூட்டத்திற்கு கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனியப்பன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினரும், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவிந்தராசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சிவக்குமார், மதியழகன், உமாபாலமுரளி, மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், புருஷோத்தமதாஸ், கிரிதரன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூரத்தாங்குடி கிளை செயலாளர் தண்டபாணி, மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். கூட்டங்களில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தலைவர் என்.கௌதமன், தலைமைக் கழக பேச்சாளர் தியாகராஜன், இளம் பேச்சாளர் பிரித்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் நடராஜன், வீரமணி, ஒன்றிய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சுதாகர், கிளை செயலாளர் சிங்காரவேல் ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள். உள்ளாட்சி அமைப்பு முன்னாள் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூரத்தாங்குடி ஊராட்சியில் நடைபெற்ற தெரு முனை பிரச்சார கூடடத்தில் கூரத்தாங்குடி அ.தி.மு.க. கிளை செயலாளர் மூர்த்தி தலைமையில் 10 குடும்பங்களை சேர்ந்த அ.தி.மு.க.வினர் 24 பேர் அக்கட்சியில் இருந்து விலகி நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கௌதமன், ஒன்றியச் செயலாளர்கள் கோவிந்தராசன், பழனியப்பன் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
The post கூரத்தாங்குடி, ஆதமங்கலத்தில் 4 ஆண்டு சாதனை விளக்க திமுக தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.

