×

செம்மொழி தினத்தை முன்னிட்டு கட்டுரை, பேச்சு போட்டி

நாகப்பட்டினம், மே 13: முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளை தமிழக அரசு செம்மொழி நாள் விழாவாக கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நாகப்பட்டினம் சிஎஸ்ஐ மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டி நடந்தது. கல்லூரி மாணவர்களுக்கு நாகப்பட்டினம் எடிஎம் மகளிர் கல்லூரியில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடந்தது. வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரி தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் குமரேசமூர்த்தி தொடங்கி வைத்தார். முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வரும் 17ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள மாநிலப் போட்டியில் கலந்து கொள்ள முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் பரிந்துரை செய்யப்படுவார்கள்.

The post செம்மொழி தினத்தை முன்னிட்டு கட்டுரை, பேச்சு போட்டி appeared first on Dinakaran.

Tags : Classical Language Day ,Nagapattinam ,Tamil Nadu government ,Chief Minister ,Kalaignar ,Tamil Development Department ,CSI Higher Secondary School… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா