×

ரயில் மோதி வாலிபர் சாவு

ராஜபாளையம், மே 13: வத்திராயிருப்பு அருகே உள்ள ஆகாசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தவம் மகன் ராபின்(27). இவர் வில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தற்காலிக ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று காலை சத்திரப்பட்டி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ராபின் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது விபத்தில் உயிரிழந்தாரா என விசாரித்து வருகின்றனர்.

The post ரயில் மோதி வாலிபர் சாவு appeared first on Dinakaran.

Tags : RAJAPALAYAM ,SON ROBIN ,AAGASAMBATI ,VATHRAYURIPU ,Virudhunagar District Court ,Williputur ,Chaturpatti Road Railway ,Moti Walibur Shavu ,
× RELATED கெடார் அருகே நள்ளிரவில் நகை கடை ஷட்டரை...