×

சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்; கணவருக்கு 20 ஆண்டு, மாமனாருக்கு 10 ஆண்டு சிறை: பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்த 16வயது சிறுமியை அதே ஊரை சேர்ந்த செபஸ்தியான் மகன் விமல்ஜோ (32), யாருக்கும் தெரியாமல் கடந்த 2017 செப்டம்பர் 3ம்தேதி குழந்தை திருமணம் செய்து பாலியல் கொடுமைப்படுத்தி உள்ளார். இந்த கொடுமை தாங்காமல் சிறுமி கடந்த 2017 டிசம்பர் 9ம்தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அரும்பாவூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து விமல்ஜோ, அவரது தந்தை செபஸ்தியான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.

இந்த வழக்கை பெரம்பலூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி விசாரித்து, விமல்ஜோவிற்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதமும், செபஸ்தியானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

The post சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்; கணவருக்கு 20 ஆண்டு, மாமனாருக்கு 10 ஆண்டு சிறை: பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur Women's Court ,Perambalur ,Sebastian ,Vimaljo ,Annamangalam ,Veppandhattai taluka ,Perambalur district ,Dinakaran ,
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...