- பாலபட்டறை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
- நாமக்கல்
- வைகாசி திருத்தேர் விழா
- பாலபட்டார மாரியம்மன் கோயில்
- சக்தி கால்
- கபு கட்டமுல்
- மோகனூர் காவிரி ஆறு
நாமக்கல், மே 12: நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற பலபட்டறை மாரியம்மன் கோயிலில், வைகாசி திருத்தேர் விழா நடைபெற்று வருகிறது. நேற்று சக்தி அழைப்பு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம் செய்ய, பக்தர்கள் மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து, நாமக்கல் நகரில் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று காலை பூச்சாட்டு விழா நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி மறு காப்பும், 25ம் தேதி வடிசோறு மற்றும் மாவிளக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 26ம் தேதி ஆராதனை, அம்மன் அலங்காரம், ரத உற்சவம், அலகு குத்துதல், பூவோடு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 27ம் தேதி மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 28ம் தேதி மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெறுகிறது.
The post பலபட்டறை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா: பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம் appeared first on Dinakaran.
