×

ஐவநல்லூரில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கீழ்வேளூர், மே 12: நாகப்பட்டினம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஐவநல்லூரில் நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில், திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொது கூட்டத்திற்க்கு நாகப்பட்டினம் வடக்கு ஒன்றிய செயலாளர் சிக்கல் ஆனந்த் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக அவைத் தலைவர் பாண்டியன் வரவேற்றார். மாவட்ட பிரதிநிதிகள் சோமு, முத்துராமன், ஒன்றிய துணை செயலாளர்கள் வேணுகோபால், , முகமது ஜமால், செம்மலர், பொருளாளர் ராமச்சந்திரன், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் அனுசியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், தலைமைக் கழக பேச்சாளர்கள் மு.கருணாநி, ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தில் மாவட்ட அயலக அணி அமைப்பாளர் சுரேந்தர், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர் சுரேஷ், மணிகண்டன், மணிமாறன், சங்கர், கார்த்திகேயன், மணிகண்டன், கரிகாலன், ஷாஜஹான், நாராயணசாமி மற்றும் கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு முன்னாள் பிரதிநிதிகள், பாக நிலை முகவர்கள், பாக நிலை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் சேகர் நன்றி கூறினார்.

The post ஐவநல்லூரில் திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Aivanallur ,Kilvellur ,Nagapattinam North Union DMK ,Nagapattinam North… ,Dinakaran ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா