×

என்எல்சியில் பயங்கர தீ விபத்து

நெய்வேலி: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனம், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். என்எல்சி திறந்தவெளி சுரங்கம் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெய்வேலியை அடுத்த அம்மேரி அருகில் உள்ள 2ம் அனல் மின் நிலைய விரிவாக்கத்தில் நேற்று அதிகாலை திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்து தீ பரவியது. அப்போது அங்கிருந்த காப்பர் ஒயர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இதையறிந்த என்எல்சி தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை போராடி அணைத்தனர். அப்போது என்எல்சி அதிகாரிகள், ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் யாரும் அங்கு பணியில் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து என்எல்சி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் காப்பர் கம்பிகள் உள்ளிட்ட சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகி உள்ளதாக தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post என்எல்சியில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : fire accident ,NLC ,Neyveli ,India ,Neyveli, Cuddalore district ,Union Government ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி...