அவனியாபுரம்: மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை தரிசிக்க பல்வேறு கிராமங்களில் இருந்தும் இரவு முதல் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவர். மேலும் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்கும் எதிர் சேவையிலும் இவர்கள் பங்கேற்பர். இந்நிகழ்வினையொட்டி ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வலையங்குளத்தில் சுயம்பு தனி லிங்க பெருமாள் கோயில் சார்பாக, இக்கிராம மக்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.
இதன்படி நேற்று வலையங்களும் மந்தை திடலில் பக்தர்களுக்கான அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இதில் வலையங்குளம், எலியார்பத்தி, பாரபத்தி, குதிரைகுத்தி, சாமநத்தம், கூடக்கோவில், வலையபட்டி, ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், சோளங்குருணி, நல்லூர் உள்ளிட்ட 18 கிராமங்களில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
The post திருப்பரங்குன்றம் அருகே சித்திரை திருவிழா அன்னதானம் 50 ஆயிரத்திற்கும் மேலானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.
