×

நீலகிரியில் தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகள் நவீன கேமரா வசதிகளுடன் இயக்கம்

ஊட்டி: தனியார் பேருந்துகளுக்கு இணையாக நீலகிரியில் அரசு பேருந்துகள் நவீன கேமரா வசதிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் பெரும்பாலான பகுதிகளுக்கு சிறிய ரக பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள் புதியவை. மேலும், பெரும்பாலான பழைய பஸ்களும் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் தற்போது புதிய பேருந்துகளே அதிகம் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது புதிதாக இயக்கப்படும் அனைத்து அரசு பேருந்துகளும் நவீன வசதிகளுடன் இயக்கப்படுகிறது. ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேபோல், தற்போது வந்துள்ள பேருந்துகளில் தனியார் பஸ்களில் உள்ளது போல் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. முன் பகுதி மற்றும் பின் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், டிரைவர் அருகே இந்த கண்காணிப்பு கேமராக்களின் மானிடர் வைக்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் பேருந்துகளை முன்னோக்கி மற்றும் பின்னோக்கி இயக்கும் போது, இந்த கேமராக்களை பார்த்து இயக்குவதால், விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது.மேலும், அனைத்து பேருந்துகளுக்கும் தற்போது கதவுகள் பொருத்தப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், பயணிகள் தவறி கீழே விழ வாய்ப்பில்லை. தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post நீலகிரியில் தனியார் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகள் நவீன கேமரா வசதிகளுடன் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Nilgiri district ,Neelgiri district ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் 88 உதவி கமிஷனர்கள் பணியிட...