×

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் 72வது உலக அழகி போட்டி ஐதராபாத்தில் தொடங்கியது

திருமலை: ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில், நேற்று மிஸ்வேர்ல்ட் உலக அழகி போட்டி தொடங்கியது. இந்த போட்டி வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. உலக அழகி போட்டிக்கு 28 வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க கிட்டத்தட்ட 120 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 111 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் ஐதராபாத் வந்துள்ளனர். உலக அழகி போட்டி ஐதராபாத் கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. 31ம் தேதி ஹைடெக்ஸில் பிரமாண்டமான இறுதிப் போட்டி நடைபெறும்.

The post பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் 72வது உலக அழகி போட்டி ஐதராபாத்தில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : 72nd Miss World pageant ,Hyderabad ,Tirumala ,Miss World pageant ,Miss World ,Dinakaran ,
× RELATED ஏர் இந்தியா விமானம் விபத்து; விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவு