- செயின்ட். சவேரியார் கோயில் திருவிழா முதுகை
- விருதுநகர்
- கன்னிசெரி புத்தூர்
- பரிசுத்த
- சவிரியார்
- கோவில்
- ஜோசப், ஆர். ஆர்.
- புனித சவிரியார்
- பீட்டர் ராய்
- நகர் பார்தந்தா
- புனித சாவிரியார் கோயில் திருவிழா
விருதுநகர், மே 10: விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் புனித சவேரியார் ஆலய திருவிழா நேற்று காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை சென்னை அருட்பணியாளர் ஜோசப், ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட்டர் ராய் முன்னிலையில் புனித சவேரியார் உருவம் பொறித்த கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
திருவிழாவை முன்னிட்டு ஆலயம் வண்ண தோரணங்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வரும் மே 17ம் தேதி தேர்பவனி நடைபெற உள்ளது. மே 18 காலை திருப்பலியுடன் கொடியிறக்கம் செய்து திருவிழா நிறைவடையும். திருவிழா ஏற்பாடுகளை ஆர்.ஆர்.நகர் பங்குத்தந்தை பீட்டர்ராய் தலைமையில் பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.
The post புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம் appeared first on Dinakaran.
