×

காஞ்சிமரத்துறை அருகே பாலத்தை பராமரிக்க மக்கள் கோரிக்கை

கூடலூர், மே 10: காஞ்சிமரத்துறை அருகே சேதமடைந்து காட்சியளிக்கும் பாலத்தை பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கூடலூரில் இருந்து வெட்டுக்காடு பளியன்குடிக்கு செல்லும் வழியில் உள்ள காஞ்சிமரத்துறை அருகே சாலையின் முல்லை பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் ஏற்கனவே கைபிடிகள் உடைந்தும், உரிய பராமரிப்பு இன்றியும் சேதமடைந்து காட்சியளிக்கிறது.

இந்நிலையில், அந்தப் பாலத்தின் ஒரு பகுதியில் அரசமரம் ஒன்று முளைத்து வருகிறது. இந்த முளைக்கும் அரச மரத்தினால் பாலத்தில் விரிசல் விழுந்து, மேலும் பலவீனமடையும் நிலையில் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாலத்தின் பராமரிப்பு பணிகள் செய்தும், மரத்தை வெட்டி அப்புறப்படுத்துவதோடு விபத்துகள் ஏற்படாமல் இருக்க பாலத்தின் கைப்பிடி சுவர்களையும் சரி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிமரத்துறை அருகே பாலத்தை பராமரிக்க மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanchimarathurai ,Gudalur ,Mullai Periyar river ,Vettukadu Paliyankudi ,Theni ,Dinakaran ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா