×

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு

 

சிங்கம்புணரி, மே 10: சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஆனால், அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக மணலூர் விஏஓ சிவக்குமார் உலகம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கட்டுக்குடிபட்டியை சேர்ந்த கணேசன், மூர்த்தி, ராதா கணேசன், மாணிக்கவாசகம், செல்வம் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 5 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Singampunari ,Chithirai festival ,Mahamariamman ,S. Puthur Union ,Kattukudipatti ,Manalur… ,
× RELATED ஓய்வூதியர் தின விழா