×

கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் ஊராட்சியில் பொன்னியம்மன், அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம் 

 

கும்மிடிப்பூண்டி, மே 10: கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன், அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. கும்மிடிப்பூண்டி அடுத்த நத்தம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பொன்னியம்மன் மற்றும் அங்காளம்மன் கோயில்கள் உள்ளன. இந்த கோயிலுக்கு பெரிய நத்தம், சின்ன நத்தம், ராஜாபாளையம், காரமண்மேடு, கோட்டக்கரை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து அம்மனை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொன்னியம்மன், அங்காளம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி பந்தக்கால் நிகழ்வுடன் தொடங்கியது. தேவதா அனுக்ஞை, கணபதி ஹோமம், தன பூஜை, பூர்ணாஹுதி, 8ம் தேதி வாஸ்துசாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, தீபாராதனை பிரசாதம், பூர்ணாஹுதி, 9ம் தேதி நான்காம் கால யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.

இதனைத் தொடர்ந்து, நேற்று கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முரளி, சம்பத் பட்டாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து இரண்டு கோயில்களில் ராஜகோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

The post கும்மிடிப்பூண்டி அருகே நத்தம் ஊராட்சியில் பொன்னியம்மன், அங்காளம்மன் கோயில் கும்பாபிஷேகம்  appeared first on Dinakaran.

Tags : Ponniyamman ,Angalamman ,Natham panchayat ,Gummidipoondi ,Angalamman temple ,
× RELATED திருத்தணி, திருவள்ளூரில் கொட்டி தீர்த்த கனமழை