×

விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள்

 

தர்மபுரி, மே 10: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2025-2026ம் ஆண்டிற்கான தர்மபுரி மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள் மாணவிகளுக்கு நடந்தது. தடகளத்தில் 7 மாணவிகளும், கால்பந்து 8 மாணவிகள், ஹாக்கி 7 மாணவிகள், கபடி 4 மாணவிகள், வாலிபால் 6 மாணவிகள் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் திருச்சி, திருவண்ணாமலை, கோவை, சென்னை, திண்டுக்கல், தர்மபுரி, தேனி, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள் என விளையாட்டுத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

The post விளையாட்டு விடுதி தேர்வு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Sports Hostel Selection Competitions ,Dharmapuri ,Tamil Nadu Sports Development Authority ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி