×

மலைமேல் அனுமதியின்றி கட்டிய வழிபாட்டு தலம் இடித்து அகற்றம்

*தகராறு செய்த 23 பேர் கைது

கே.வி.குப்பம் : கே.வி.குப்பம் அருகே மலை மேல் அனுமதியின்றி கட்டிய வழிபாட்டு தலம் இடித்து அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் தகராறு செய்த 23 பேைர போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த செஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சி மோட்டூர் மலைப்பகுதியில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் ஒரு தரப்பினர் தகர ஷீட்டுகளால் ஆன கொட்டகை அமைத்து மத வழிபாட்டு தலம் அமைத்துள்ளனர்.

இதுகுறித்து வருவாய்த்துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து சில தினங்களுக்கு முன் அங்கு சென்ற வருவாய்துறையினர் இடத்தை அளவீடு செய்து விவரங்களை சரிபார்த்தபோது ஆக்கிரமிப்பு செய்தது உறுதியானது.

இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடப்பட்டது.அதன்பேரில் சப்-கலெக்டர் சுபலட்சுமி தலைமையில் தாசில்தார் முரளி தரன் உள்ளிட்ட வருவாய்துறையினர், ஏடிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் பனமடங்கி போலீசார், வனத்துறையினர், ஊரக வளர்ச்சிதுறையினர் நேற்று காலை அங்கு சென்று ஆக்கிரமிப்பு வழிபாட்டு தலத்தை ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர். அப்போது அங்கிருந்து ஆக்கிரமிப்பாளர்கள், தடுக்க முயன்று அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக அங்கிருந்த 23 பேரை கைது செய்து காளாம்பட்டு பகுதியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். இதுதொடர்பாக போலீசார், வருவாய்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மலைமேல் அனுமதியின்றி கட்டிய வழிபாட்டு தலம் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : K.V.Kuppam ,Vellore district… ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...