×

ஆனைமலையில் நடந்த கூட்டத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

பொள்ளாச்சி : கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஆனைமலையில் நடைபெற்றது. இதற்கு கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில், எம்.பி. ஈஸ்வரசாமி, ஆனைமலை மேற்கு ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி சுமார் 50க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களை மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் சால்வை அணிவித்து வரவேற்றார்.

இதையடுத்து நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஆனைமலை பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இதில், வால்பாறை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அருள்மொழி, சோமசுந்தரம், வேட்டைக்காரன் புதூர் பேரூர் கழக செயலாளர் பார்த்திபன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ், குறும்பை கனகராஜ் ஆகியோர் நான்காண்டு சாதனைகளை விளக்கி சிறப்புரை ஆற்றினர்.

The post ஆனைமலையில் நடந்த கூட்டத்தில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர் appeared first on Dinakaran.

Tags : Alternative ,DMK ,Anaimalai ,Pollachi ,Coimbatore South District Anaimalai West Union DMK ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Coimbatore South District League ,Thalapathy Murugesan… ,Dinakaran ,
× RELATED சென்னையில் தெருக்கள், சாலைகளை தரமாக...