×

புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு!

 

வாடிகன் சிட்டி: புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபை தலைவராக இருந்த போப் ஆண்டவர் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 21ம் தேதி காலமானார். லட்சக்கணக்கானோர் போப் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிலையில் கடந்த 26ம் தேதி போப் உடல் அவரது விருப்பப்படி ரோமில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் ரகசிய கூட்டம் நேற்று முன்தினம்(மே 7) நடந்தது. இதில் 133 கர்தினால்கள் ரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.

புதிய போப்பை தேர்வு செய்ய மூன்றில் இரண்டு பங்கு கர்தினால்களின் ஆதரவு தேவை, ஆனால் நேற்று முன்தினம் நடந்த முதற்கட்ட வாக்குப்பதிவில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்கும் கிடைக்கவில்லை. இதை தெரிவிக்கும் விதமாக ரகசிய கூட்டம் நடைபெற்ற அறையில் இருந்த புகைப்போக்கியில் இருந்து கரும்புகை வௌியேறியது.
தொடர்ந்து நேற்று இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில் முடிவு எட்டப்பட்டதால் வெள்ளை நிற புகை வெளி யேறியது. புதிய போப் தேர்வானதாக அறிவிக் கப்பட்டது. இந்நிலையில், புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். போப் தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து உற்சாகமாக வரவேற்ற கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் ராபர்ட் பிரிவோஸ்ட்.

 

The post புதிய போப் ஆக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட் தேர்வு! appeared first on Dinakaran.

Tags : Robert Privost ,United States ,Pope ,Vatican City ,Pope Francis ,Catholic Church ,
× RELATED தைவான் மெட்ரோவில் மர்ம நபர் கத்திக்குத்து; 3 பேர் பலி