கேடிசி நகர், மே 8: சங்கரன்கோவில் அடுத்த சின்னக்கோவிலாங்குளம் அருகே உள்ள சண்முகநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தூர்பாண்டி (60). விவசாயியான இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் கவனிக்க ஆளில்லாமல் தனியாக இருந்து வந்தார். இதனிடையே அவருக்கு ஒரு கால், கை செயலிழந்து விட்டது. இதில் மனமுடைந்த செந்தூர்பாண்டி நேற்றுமுன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தூர்பாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்னக்கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post விவசாயி விஷம் குடித்து தற்கொலை appeared first on Dinakaran.
