×

தத்தாத்திரிபுரம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம்

 

சேந்தமங்கலம், மே 8: புதுச்சத்திரம் ஒன்றியம் தத்தாத்திரிபுரம் ஊராட்சி சேவாக்கவுண்டம்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ், ரூ.9.16 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் அருளரசு தலைமை வகித்தார்.

அட்மா குழு துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலை விகித்தார். விழாவில் ராமலிங்கம் எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். விழாவில் கூட்டுறவு சங்க செயலாளர் தேன்மொழி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நேசராஜ், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் விஜயன், முன்னாள் துணைத் தலைவர் நல்லுசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post தத்தாத்திரிபுரம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Dattathipuram panchayat ,Senthamangalam ,Puduchathiram ,Cooperative Zone Coordinating Director… ,
× RELATED எவர்கிரீன் கராத்தே பள்ளி குழந்தைகள் முதலிடம்