×

வேவுபார்க்கும் பாகிஸ்தான் ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ரயில்களின் கால அட்டவணை பற்றி பாகிஸ்தான் உளவு துறை கேட்கலாம் என்றும் எனவே ரயில்வே ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் மீது தாக்கு தல் நடத்துவதற்கு ஒரு நாள் முன்பு இந்திய ரயில்வே நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. ரயில்வேயில் உள்ள ஒவ்வொரு மண்டலங்களின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், இந்தியாவில் ராணுவத்தினருக்கான சிறப்பு ரயில்களின் இயக்கம் குறித்த விவரங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பு தேடும்வாய்ப்பு உள்ளது.

எனவே, ரயில்வே சம்மந்தமான ரகசியத் தகவல்களை எந்தவொரு அங்கீகரிக்கப்படாத நபருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. ரயில்வே அதிகாரிகள் , ஊழியர்களைத் தவிர வேறு எந்த அங்கீகரிக்கப்படாத நபருக்கும் அத்தகைய தகவல்களை வெளியிடுவது பாதுகாப்பு மீறலாகக் கருதப்படும். மேலும் அது தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

The post வேவுபார்க்கும் பாகிஸ்தான் ரயில்வே ஊழியர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pakistani Railway ,Railways ,Pakistan, India… ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...