போடி, மே 8: போடி அருகே விசுவாசபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன் மகன் குணசீலன்(25), ராணுவ வீரர். கோயில் திருவிழாவுக்காக சில நாட்களுக்கு முன்பு குணசீலன் சொந்த ஊருக்கு வந்தார். அங்கு நடைபெற்ற காவடி ஊர்வலத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது விசுவாசபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன்கள் ஜெகதீசன், சரவணன் ஆகியோர் குடி போதையில் ஊர்வலத்திற்குள் புகுந்து குணசீலன் மீது மோதியுள்ளனர். இதை கண்டித்த குணசீலனை, அவர்கள் ஆத்திரத்துடன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் போடி புறநகர் காவல் நிலைய எஸ்.ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கோயில் திருவிழாவில் ராணுவ வீரரை தாக்கிய இருவர் மீது வழக்கு appeared first on Dinakaran.
