×

நூலக கட்டிடம் திறப்பு: கீழ்படப்பை கிராமத்தில்

ஸ்ரீபெரும்புதூர்: கீழ்படப்பை கிராமத்தில் உள்ள  நூலக கட்டிடம் மக்களின் பயன்பாட்டுக்காக, மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன் திறந்து வைத்தார். குன்றத்தூர் ஒன்றியம் படப்பை ஊராட்சி கீழ்படப்பை பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.6 லட்சத்தில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது.  இந்த கட்டிடம் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி மூடியே வைத்ததால் பாழடைந்து காணப்பட்டது. இதையடுத்து அந்த கட்டிடத்தை சீரமைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், மேற்கண்ட நூலக கட்டிடம் சீரமைக்கும் பணி நடந்து முடிந்தது. இதையடுத்து நூலக கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. குன்றத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், ஒன்றிய பொறியாளர் வசுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன் கலந்து கொண்டு நூலக கட்டிடத்தை திறந்து வைத்தார். …

The post நூலக கட்டிடம் திறப்பு: கீழ்படப்பை கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Sriperumthur ,District Committee ,Kapai Manokaran ,Obedipadupam ,Building ,Subordinate Village ,Dinakaran ,
× RELATED இ.கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம்