×

கடலூர் முதுநகர் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை தற்கொலை

கடலூர்: கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ். இவரது மனைவி நந்தினி (29). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கிருஷ்ணராஜ் மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார். நந்தினி முதுநகர் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ளதால் விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக நேற்று வழக்கம்போல் நந்தினி பள்ளிக்கூடத்துக்கு வந்திருந்தார். அப்போது திடீரென வகுப்பறைக்கு சென்ற அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து நந்தினி குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

The post கடலூர் முதுநகர் அருகே தனியார் பள்ளியில் ஆசிரியை தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Cuddalore Capital ,Cuddalore ,Krishnaraj ,Semmangupam Metu Street ,Cuddalore Mudunagar ,Nandini ,Nandini Mudhunagar ,Cuddalore Mudhunagar ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!