புதுடெல்லி: அரசு பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கியூட் நுழைவுத்தேர்வு நாளை முதல் தொடங்க இருந்தது. இந்நிலையில் எனினும் நேற்று பிற்பகல் வரையிலும் பாட வாரியான தேர்வு தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிக்கவில்லை. எனவே கியூட் நுழைவு தேர்வு ஒத்திவைக்கப்படலாம் என்றும், மேலும் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கியூட் நுழைவுத் தேர்வு எழுதுவதற்காக இந்த ஆண்டு 13.5லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
The post நாளை நடைபெற இருந்த இளங்கலை கியூட் தேர்வு ஒத்திவைப்பு? appeared first on Dinakaran.
