×

திருத்துறைப்பூண்டியில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது

 

பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா ேதரோட்டம் திருத்துறைப்பூண்டி பிறவிமருந்தீஸ்வரர் கோயிலின் தல வரலாறு :திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் தாயார் :பிரகன்நாயகி (பெரியநாயகி)திருவிழா :சித்திரை திருவிழா இங்கு விசேஷம், நவராத்திரி, திருவாதிரை விழா ஆகியவனவும் நடக்கின்றன. இத்தல சிறப்பு:இத்தல இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிப்பது முக்கிய சிறப்பாகும். இக்கோயிலின் விசேஷ அம்சம் சிவனின் கஜசம்ஹார மூர்த்தியாகும். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இம்மூர்த்தியை வழிபடுவதன் மூலம் மனதில் பயம் என்ற சொல்லுக்கே இடமிருக்காது. இவர் ஆணவத்தையும் வேரறுப்பவர்.

பொதுவான தகவல்: அசுவினி நட்சத்திரக்காரர்களின் பொது குணம்: செல்வந்தராகவும், புத்தி சாதுர்யம் கொண்டவர்களாகவும் இருப்பர். விவாதம் செய்வதிலும், ஆடம்பரத்திலும் நாட்டம் இருக்கும். மற்றவர்களை நன்கு புரிந்து கொண்டு அன்புடன் பழகுவர். ஆசிரியரைப் போல நல்ல விஷயங்களைப் பிறருக்குப் போதிப்பர். தெய்வீக வழிபாடு, புராண, ஜோதிட சாஸ்திரங்களில் ஈடுபாட்டுடன் விளங்குவர்.பிரார்த்தனை:அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

 

The post திருத்துறைப்பூண்டியில் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Tags : Driturapundi ,Naravi Hanishwarar Temple Chitrai Festival ,Etarotum ,Thirutharapoondi Pravihanishwarar ,Temple ,Thiruthuraipundi ,Naravi Hanishwarar ,Prakannayagi ,Carnivora ,Chitrai Festival ,Chitrai Festival Navratri ,Thiruvathirai Festival ,Diturapundi ,
× RELATED திருச்சி அரியமங்கலம் கிடங்கில் 3ம் கட்டமாக குப்பைகளை அகற்ற திட்டம்