- ஜமாபந்தி
- திருவாரூர் மாவட்டம்
- மன்னார்குடி
- மன்னார்குடி வட்டாச்சியர்
- கலெக்டர்
- மோகனசந்திரா
- மேலவாசல்
- நெடுவாக்கோட்டை
- முகல் சேதி
- ராமபுரம்
- தின மலர்
மன்னார்குடி, மே. 7: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டத்தில், ஜமாபந்தி நிகழ்ச்சி கலெக்டர் மோகனச் சந்திரன் தலைமையில் மன்னார்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று மன்னார்குடி வருவாய் சரகத்திற்குட்பட்ட மேலவாசல், நெடுவாக்கோட்டை, முதல் சேத்தி, ராமாபுரம், மூவாநல்லூர் உள்ளிட்ட 28 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் பங்கேற்று முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, மகளிர் உரிமைத் தொகை மற்றும் ஊராட்சி சார்பில் அனைத்து விதமான் கோரிக்கைகள் அடங்கிய 131 மனுக்களை மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் வசம் நேரில் அளித்தனர்.
அதில், 10 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும், 1 நபருக்கு பட்டா ஆணையும் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் உடனடியாக வழங்கினார். நிகழ்ச்சியில், துணை ஆட்சியர் ராஜா, மன்னார்குடி தாசில்தார் கார்த்திக், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாச்சியர் ராஜம்மாள், தலைமையிடத்து துணை வட்டாச்சியர் சந்திரசேகரன், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்கள் அளித்த மனுக்களை பரிசீலித்தனர்.
The post திருவாரூர் மாவட்ட தாலுகா அலுவலகங்களில் நடந்த ஜமாபந்தியில் ஆர்வத்துடன் மனு அளித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.
