×

திமுக எம்எல்ஏவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்


சென்னை: திமுக எம்.எல்.ஏ காந்திராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ. காந்திராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021ல் நடந்த சட்டப் பேரவை தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றேன். தேர்தலின்போது, ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாக வந்த புகாரின்பேரில் என் மீதும், மேலும் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

2021ம் ஆண்டு பதிவு செய்த வழக்கின் குற்றப்பத்திரிகையை 2024ம் ஆண்டுதான் தாக்கல் செய்துள்ளனர். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் கே.முத்து கணேச பாண்டியன் ஆஜராகி, ஓர் ஆண்டு சிறை தண்டனை வழங்க கூடிய வழக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

சுதந்திரமான சாட்சிகளும் அதில் இல்லை. எனவே, வழக்கை ரத்து செய்யவேண்டும் என்று வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திண்டுக்கல் மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெறாமல், போலீசார் வழக்கை எந்திரனமாக பதிவு செய்துள்ளனர். அதனால், மனுதாரர் மீதான வழக்க ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post திமுக எம்எல்ஏவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : High Court ,DMK MLA ,Chennai ,Madras High Court ,DMK ,MLA ,Gandhirajan ,2021 Legislative Assembly elections ,Vedasandur ,Dinakaran ,
× RELATED பள்ளிபாளையம் அருகே பரபரப்பு சம்பவம்; தனியாக இருந்த மூதாட்டி கொலை