×

பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவது மத்திய அரசுக்கு முன்னரே தெரியும்: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

ஜார்கண்ட்: பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவது ஒன்றிய அரசுக்கு முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். ராஞ்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர், தீவிரவாத தாக்குதல் நடத்தப்போவது ஒன்றிய அரசுக்கு முன்பே தெரியும் குறிப்பாக 3 நாட்களுக்கு முன்பே புலனாய்வு அமைப்பு பிரதமர் மோடிக்கு தாக்குதல் தொடர்பான தகவலை கொடுத்துள்ளது. தாக்குதல் எச்சரிக்கை பற்றி முன்பே அறிந்ததால் பிரதமர் காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார் என்ற குற்றசாட்டை வைத்தார். அவரது உயிருக்கு கொடுக்கும் மதிப்பை, சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஏன் கொடுக்கவில்லை?

ஏன் பாதுகாப்பை காஷ்மீரில் பலப்படுத்தவில்லை? காஷ்மீரில் துணை ராணுவப்படையினர், எல்லை பாதுகாப்பு படையினர், ராணுவம் உள்ளது இருந்த போதிலும் ஏன் அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்ற கேள்வியை வைத்தார். காங்கிரஸ் கட்சி எப்போதும் தீவிரவாதத்திற்கு எதிராக உள்ளது. அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் தீவிரவாதத்திற்கு எதிராக நாங்கள் துணை நிற்போம். தாக்குதல் நடந்த பிறகும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டியபோது அரசு எடுக்கும் முடிவுக்கு துணை நிற்போம் என தெரிவித்திருந்தோம். ஆனால் இந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக புலனாய்வு துறை தகவல் கொடுத்த பின்னரும் பிரதமர் அலட்சியமாக இருந்துள்ளார் என அவர் குற்றசாட்டு வைத்தார்.

The post பஹல்காம் தாக்குதல் நடக்கப்போவது மத்திய அரசுக்கு முன்னரே தெரியும்: மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Central Government ,Pahalgam attack ,Mallikarjuna Kharge ,Jharkhand ,Congress ,Union Government ,Ranchi ,Pahalgam ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை...