×

நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: நாடு முழுவதும் சாலை விபத்துகளில் காயமடைந்தால் சிகிச்சை இலவசம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால், ரூ.1.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், 7 நாட்கள் தனியார் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மருத்துவமனைகளில் மட்டுமே இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அமைத்திருக்கிறது.

வரும் 2030-க்குள் சாலை விபத்துகளில் இறப்போர் எண்ணிக்கையை பாதியாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. சாலை விபத்துகள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற கண்டிப்பை அடுத்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நம்மை காக்கும் 48 திட்டத்தில் ஏற்கனவே இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU government ,Delhi ,Union government ,Union Ministry of Road Transport and Highways ,Ministry of Road Transport and Highways ,Dinakaran ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...